ஆசார ஒழிப்பும் சுத்திகரிப்பும்

உலகிலுள்ள முக்கிய மதங்களைப் பார்க்கும் போது சுத்திகரிப்பு என்பது சராசரி வாழ்வோடு ஒட்டிய குழந்தை பிறப்பு, தீட்டு, வாயு, தூக்கம், புணர்ச்சி சுயநினைவு இழத்தல், இரத்தக்கலப்பு, வாந்தி, விந்து நோய் முதலியன போல் அதுவும் இடம் பெறுகிறது.

இந்த சுத்திகரிப்புகளுள் பகாய் நம்பிக்கை தவிர மற்றவர்கள் தங்கள் உடம்பை நீருக்குள் மூழ்குகின்றனர்.

யூதர்கள் ஆசாரப்படி கைகளைக் கழுவுகின்றனர். இஸ்லாமியர்கள் குசலும், வதுவும் செய்கின்றனர். இந்துக்கள் புனித கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டு அச்சமானாவும், புண்ணியவசனமும் செய்கின்றனர். இந்தோயிஸ்ட் மிசோகியும் அமெரிக்கா வாழ் இந்தியன் (ளறநயவ டழனபந) கொண்டுள்ளனர்.

உலகப் பார்வையில் பல வித்தியாசங்கள் இருந்தாலும் அழுக்கை நீரில் மூழ்குவதன் மூலம் அவர்கள் பாவங்கள் கரைவதாக நம்புகின்ற ஒற்றுமை எல்லோருக்கும் உண்டு. இந்த சுத்திகரிப்பின் விழிப்புணர்வு எல்லா மதங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

எப்போது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உந்துதலோடு இவ்வாறு சுத்திகரித்துக் கொள்வது நடத்தையில் ஓழுக்கத்தை உருவாக்குவதால் இது மத உணர்வாக உருவேற்கிறது.

‘சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தது‘ என்ற பழமொழியை உயிப்ப்பிக்க வைத்தது. உடம்பார் கோயிலில் தண்ணீர் தூய்மைபடுத்தும் கருவியாக மாறியது. தண்ணீரில் மூழ்குவதே அகத்துக்கு வலியூட்டும் ஆசாரமாயிற்று. ஆனால் இந்த தற்காலிக சுத்தப்படுத்துதலின் பலன் சிறிது காலமே நிலைக்கும். குறுகிய காலம் கழிந்து மீண்டும் தங்கள் பாவங்களைப் போக்க அகத்தின் தீட்டைத் துடைக்க கழுவி சுத்திகரிக்க வேண்டிய கட்டாயம் சேர்கிறது.

எவராயினும் குளிப்பதும் துவைப்பதும் உண்மையான சுத்தத்தை அகமும் புறமும் பெற்றிட இந்த அற்பமான தோல் ஆiமான சிகிச்சைக்கு உள்ளாகிறது.

இதனால் மேற்பரப்புக்கு அடியில் உள்ள மாம்சீகத்தில் அழியாத ஜீவனுள்ள ஆன்மீக நலனுக்கு இதனால் என்ன நன்மை கிடைத்திடும்?
ரபீ யேசுவா தன் யூத மக்களை நோக்கி இவ்வாறு பேசுகிறார்.

மத்தேயு 15: 1,2,11,17-20
1. அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:

2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.

11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

20. இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.

புற ஒழுக்கைத் தவிர்த்து அக அழுக்காகிய ஒழுக்கசிதைவையும் பரிசுத்தமற்ற பாவ நிந்தையை களைய உள்ளார்ந்த மனஸ்தாபம் அடைந்து நீக்குவதே முக்கிய அறிவின் வெளிப்பாடு. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் லேடிமேக்பத் ‘பேய்பிடித்த இடமே வெளியே போ “ என்று கத்துகிறாள். டங்கன் அரசனின் இறப்புக்குத் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியடைய தன் இரத்தக்கறை படிந்த கைகளைக்கழுவி கறை நீங்குபடி கத்துவாள்.

இவ்வாறு கழுவுவது மூலம் தான் அழுக்காயிக்கிறேன் என்று மறைமுகமாக உணர்தலுக்குத் தூண்டுதல் எனலாம். மனித ஆற்றலுக்கு முடிந்த அளவு மேற்கொள்ளும் சுய முயற்சியே இது. தன் ஒழுக்கதோல்விகளை சரிசெய்யும் சிறிய முயற்சியே இது. இதன் மூலம் தங்கள் விருப்பம் நிறைவேறும் பக்தியின்பாற்பட்ட ஆசாரம் வெளிப்படும். இதைக் கடைபிடிப்பதால் தோன்றும் வைராக்கியம் அதனால் ஏற்படும் மனநிறைவே போதும் என்றெண்ணுகின்றனர். தன் நிலை உயர்த்தும் அங்கீகாரத்தின் வழியாக இதை நம்புகின்றனர்

தேய்ப்பதும், கழுவுவதும் மேற்பூச்சை மெருகூட்டும் ஆவி ஆத்துமாவும் பிழைத்தேற என்ன வழி என்ற ஆழமான அறிவு சாதாரண மானிடனுக்கு ஏன் புலப்படவில்லை. பச்சை குத்திக் கொள்ளும் அடையாளங்கள் போல் தேங்கிநிற்கும் பாவங்களை அழிக்க வேண்டாம்.

கடந்த காலமும், எதிர்காலமும் மீட்சிபெற இந்தச் சுத்திகரிப்பு வழி வகுக்குமா? எல்லா மனித உயிர்களும் உண்மை மனச்சாட்சியின் தவிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும் நியாயதீர்ப்பு நாளில் தன் பங்கைப் பெற்றிட விழிப்பான வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?

ரோமர் 2:14 – 16
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

அழிந்து போகும் மாயைக்கு முக்கியத்துவம் தந்திடாது, வெளிச்சமான பாதைக்கு நேராக நம் பயணத்தைத் திருப்பிக் கொண்டு போக இந்த விழிப்புநிலை உதவும்? கடவுள் இல்லை என்பவன் மரத்து உளுத்துப்போன மரம் போன்றவன் அவனைத் துளிர்த்து உயர் மீட்சி பெறச் செய்ய இத்தகைய வெற்று ஆரவார ஆசாரங்கள் மட்டும் எதிர்த்து வெல்ல முடியுமா? அவன் வாழ்வை வெறுத்து சலித்து மதமாகிய இந்தச் சாலையில் பெலமற்றவன் விழுந்து கிடக்கிறான் இந்தப்பாதை எங்கேயும் கொண்டுபோய் விடாது என்ற பிதற்றித் திரிகிறான். இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு இடம் இருக்கிறது. அதற்கு வழி தானாக தேடி மாய்ந்து போகிற மனுக்குலத்தை மீட்க ஒரே திர்;வு கர்த்தர்தான். அவரே தன் சிருஷ்டிக்காக உயிரைக் கொடுத்து விலை கொடுத்தவர் அவரைத் தேடிப் போக வேண்டாம். அவரே தேடிவருவார். நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்தால் அவர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார். இருபக்கமும் பயன்பாடுடைய வலிமை மிகு பொழிவில் அவன் இளைப்படைவதில்லை. பெலமற்ற அவன் பெலவானாகிறான்.

இந்த மெய்யான சுத்திகரிப்பு அவனுக்குள் அற்புதம் நிகழ்த்துகிறது. இது ஆண்டவரின் இலவசபரிசு இதனால் தெய்வத்தோடு ஒன்றிப்போகிறான். ஆராதனை செய்யும் அற்புத ஆற்றல் அவனுக்குக் கிடைக்கிறது. அவன் வழிகள் எல்லாம் வாய்க்கிறது.

தீத்து 3:5
5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

ரோமர் 6 : 23
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன

எபேசியர் 2: 8-9
8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

1யோவான் 1:7,9
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

உண்மை மனஸ்தாபம் இன்றி தண்ணீர் ஞானம் பெற்றுக் கொண்டால் வெறுமனே குளித்தது போல் தான் அறிக்கையிட்டு உண்மையாக தண்ணீர் ஞானஸ் நானம் பெற்றவனிடத்தில் விசுவாசம் மையம் கொள்கிறது. பரிசுத்தமான இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தமே உங்களை மீட்டெடுத்து விட்டது. மறுபிறப்பாகிவிட்ட உங்களை பரிசுத்த ஆவியானவர் சிந்தை எண்ணம், செயல் அத்தனையிலும் மறு ரூபமாக்குவார்.

இது நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சலந்து திரவமாகும் சாதாரண சேர்க்கை அல்ல. உள்ளே மிகப்பெரிய மாற்றத்தை உலகோர் காணும் வெளிச்சத்தை ஞானஸ் நானம் அளிக்கிறது. இதன் மூலம் இரட்சிப்பு என்னும் பரிசை இலவசமாக அருளுகிறார் தேவன். தண்ணீரில் மூழ்கி எடுப்பதால் மாத்திரம் இது நிகழவில்லை. பரலோகமே சாட்சியிட்டு மகிழ்கிறது. குழந்தை கருக்கொண்டு உருவாவதுபோல், இந்த இரட்சிப்பு அவரால் வந்தது. மனிதனின் சித்தத்தாலே பக்தியான செயல்களோ இது வருவது இல்லை. தேவன் முன்குறித்து அளவில்லாத தயவினால் மேலிருந்து அனுப்பும் மாபெரும் ஈவு.

இந்த மறுபிறப்பு இந்து, புத்த மதங்கள் விவரிக்கும் மறுபிறப்பு அல்ல.

வேதம் சொல்கிறது

எசேக்கியல் 36:25 – 27
25. அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

26. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

ரவியேசுவா கூடாரபண்டிகையின் போது சுக்கோத்தில் நிகழ்ந்தது போல் என்கிறார்.

யோவான் 7.37-39
37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.

பலிசெலுத்துவது தற்காலிக திருப்தி அளிப்பது வெறும அடையாளம்தான் ஆனால் அது மறுபிறப்பின் உண்மை அல்ல.
பலிசெலுத்த அவசியம் இல்லை. அவரே ஆட்டுக்குட்டியாக பலியானார். ஜெபமும், உபவாசமும், நல்ல காரியங்களும் செய்தால் போதும் என்று யூதர்கள் எண்ணுகின்றனர். இது உடன்படிக்கையை மீறுவதாகும்.

டோராவில் இஸ்ரவேலர் மறுதலித்த நிகழ்ச்சிக்கு ஒப்பானது.

லேவி 17:11
11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

மிட்ஸவாட் எத்தனை செய்தீர்கள் என்று கணக்கில்லை? என்று சொல்வது எத்தனை? உன் பாவம் மன்னிக்கப்ட்டது. ஏசாயா 53ல் சொல்வதுபோல் போதும் இஸ்லாமியர் இயேசுவின் இறப்பை மறுக்கின்றனர் ஆபிரகாம் ஈசாக்கை பானபலியாகக் கொடுத்ததுபோல், மெசியாவை பலி கொடுத்தார். சிலுவையின் அவமானம், செய்யாத பழிக்கான நிந்தை எல்லாமே தன் பிள்ளைகளுக்காக சகிப்புத்தன்மையால் மகிமையாக மாறச் செய்தார். அதனால் நாம் பிழைக்கிறோம். எபிரேயர் 2-9-28: 12-2 அவர் உங்களுக்கு ஜீவத்தண்ணீர் தருவார் அதனால் திருப்தி அடைவீர்கள் அது உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் பிதாதண்ணீர் தரலாம் ஆனால் குடிக்க வைக்கமாட்டார்.

Jesussandjews.com/wordpress/2011/07/14/crucification-of-jesus-christ-and-islam/

சமாரிய பெண்ணுக்கு ஜீவத்தண்ணீர் தருவேன் என்றவர் உங்களுக்கும் நிச்சயம் தருவார்.

ஆவிக்குரிய தாகத்தை அவர் நிரப்பி உயர்ப்பிப்பார்.

கள்ளத்தீர்க்கதரிசிகளும் தாகம் தீர்ப்பர் ஆனால் திரும்ப தாகம் ஏற்படும் நாவறளும்

யோவான் 4:10, 13,14
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.

14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

மத் 11: 28-30.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Ritual cleansing and purification

Leave a Reply