இந்து மதக்கடவுள்கள்

இந்துமதத்தில் ஒருவருக்குரிய கடவுட் கொள்கை பலதரப்படும். ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படும் அவர்களது நம்பிக்கைகள் மூன்று வகையுள் அடங்கும்.

1. கடவுள் இல்லை.
2. ஒருகடவுள்.
3. பலகடவுள்கள் (330 மில்லியன்)

இந்த வேறுபட்ட கடவுள் பற்றிய கருத்துக்கள் பல பரிமானங்களுள் தரப்படுத்தும் போது ஒரே பொருண்மை(Monism) அனைத்திலும் இருப்பது, (Pantheism) உலகம் கடவுளின் ஒருபகுதி எனில் (Panentheism) பொருள்கள்வணங்குதல் (Animism) இந்த நம்பிக்கைகளை ஆராயும் போது கடவுளைப் பற்றிய வெளிப்பாடு, எதிர்வாதம் தருவதாகவும், தர்க்கங்களுக்கு உரியதாகவும், ஒப்புக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

இப்படி மாறுபட்ட கருத்துக்களை எவ்வாறு ஒன்று சேர்த்து சொல்ல முடியும். இந்த சமுதாயத்தில் A யும் A அல்லாததும் இரண்டும் ஒன்றுபோல் துல்லியமாக கடவுளை வெளிப்படுத்துவதாக எண்ணுவது ஏற்புடையதாகுமா? இந்தக் கொள்கைகள் மட்டுமல்ல, பகுத்தறிவு தேடலுக்குரிய அடிப்படை உண்மையன்று, எவ்வாறு மக்கள் அன்றாட வாழ்வில் செயல்பட முடியும்?

இந்து மதத்திலுள்ள கடவுள்கள் புராணங்களின் பின்னணியிலும் பழங்குடியினர் நம்பிக்கைகளிலும் உள்ளதால், சரித்திர நிகழ்வுக்கு மாறாக இருப்பதால் கணிசமாக எடுத்துக் கொள்ள முடிகிற பலமான உண்மை என்று கணிக்க முடிவதில்லை. செவிவழிக் கதையாகவும், புராணக்கதை வடிவிலும் இருப்பதால் அதன் ஸ்திரத் தன்மை குறைவால் மூடநம்பிக்கை என்று எண்ணவைக்கும்.

உலகின் பழையபுராணக்கதைகள் வழங்கும் கிரீக், ரோம, ஜெர்மன், ஸ்லேவிக் நாகரீகங்களின் கதைகளோடு இவையும் வைத்தெண்ணப்படும்போது வெறும் நாட்டுப்புறக் கதைகளாகவும், கட்டுக் கதைகளாகவும், எண்ணப்பட்டு முக்கியமாகக் கருதப்படுவதில்லை.

கடவுள் கதைகள் உணர்ச்சியூட்டும் வலிமையுடையதும், மக்களைக் கவர்வதாகவும் உள்ளவை. கலாசார சூழலில் கடமை உணர்வும் பயபக்தியையும் மேம்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. இவை தனிப்பட்ட மனிதனையும், குடும்பம் இனம், சமுதாயம், ஆகியவற்றையும் பாதிக்கிறது. அவை நம்பவதற்கு ஆதாரமில்லாமல் போனாலும் செல்வாக்கு பெற்றவை. ஆனாலும் காலத்தின் வளர்ச்சியில் கதை போன்று நம்பகத்தன்மை இழக்கிறது. இன்னும் இந்த நம்பிக்கைகள் நிலைத்து இருப்பதற்கு பலகாரணங்கள் உள்ளன.

வாழ்வில் ஒவ்வொருகட்டத்திலும் இந்த நம்பிக்கைகளைத் தவிர்த்தல் முடியாதது. அடுத்தவரோடு இணங்கிப்போகும் ஊரோடு ஒத்துப்போகும் வாழ்வியல் நெறிப்படி வாழ்வதாக இருக்கலாம். கலாச்சார பாரம்பரியத்துக்கு மதிப்பு அளிக்கும் பண்பாக இருக்கலாம். சமுதாயத்தில் ஒரு பாதுகாப்புக்கு இந்தப் பங்களிப்பு தேவை என்றெண்ணலாம். விளையாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் விசுவாசத்துடனும் பற்றுடனும் கட்சிக்கும் குழுவுக்கும் நன்றியுணர்வுடன் இயங்குவது போலவும் இருக்கலாம்.

உலகப்பார்வையில், நாசிஸத்தின் அக்கிரமத்தால் எல்லாச் சமுதாயங்களும் கலாச்சாரங்களும் ஏமாற்றப்பட்டது என்று கணிக்கப்பட்டது.

ஆதலால் தத்துவரீதியாக எல்லாருக்கும் எல்லாமும் தவறாகவும் முடியும். எல்லாருக்கும் சரியாகவும் முடியாது. நிறைய மக்களால் கடவுட் கொள்கைகளைப் பற்றி யோசிக்க முடியாது. மிகைப்படுத்தி மதிப்பும் சிறப்பும் அளிக்கப்பட்டுவரும் விஷயத்துக்கு எதிரான எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஆனால் என் இந்து நண்பர்களுக்கு அக்கறையுடன் கூறுவது என்னவென்றால், கலாசார எல்லைகளுக்குள்ளும், வாழ்வின் அடிச்சுவடுகளைப் பதிக்காமல் உண்மைவாழ்வின் தேடலை வேறொரு கோணத்தில் பார்த்து ஆத்மாவினை வெளிச்சத்துக்குள் வழிநடக்க உங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தனியே நடக்க நேர்ந்தாலும் உங்களை வழிநடத்த ஒரு பேரொளி தீபம் உங்கள் முன்பு இருப்பதை மறவாதீர்கள். இந்த மெய்யான வழியை விட்டு விட்டால், பலரால் தவறாக வழிநடத்தப்பட ஏதுவாகும்.

மத்தேயு 7:13,14
13. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

இறுதியாக, இந்தச்செய்தியை வெளிப்படையாக கூறியதன் நிமித்தம், நான் உங்களை புண்படுத்தியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அநேகம்பேர் இந்த நம்பிக்கைகளை பக்தியாகவும் அர்ப்பணிப்பாகவும், இந்த நம்பிக்கைகளை உடையவர்களாயிருப்பீர்கள். நான் என் இந்து நண்பர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த நம்பிக்கைகள் தவறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. வாழ்வின் எந்தச் சுமையாக இருந்தாலும் உங்களைத் தோளின்மீது சுமந்து தாங்கி நடத்தக் கூடிய ஒருவர் இருக்கிறார்.

மத்தேயு 11: 28 – 30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

gods of hinduism

Leave a Reply