இயேசுவுடன் எனது சாட்சி

என் பெயர் ராப். அமெரிக்க ஜக்கியநாட்டிலுள்ள டெக்ஸாஸைச் சேர்ந்தவன். உங்களுக்கு என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

எனக்கு முக்கியமான தேவன் மீதுள்ள என் விசுவாசத்தைச் சொல்லியே எப்போதும் என் சாட்சியைத் துவங்குவது வழக்கம்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு உண்மையான வெறுமையான நிலவரத்தில் இருந்தேன். இயேசுகிறிஸ்து மீது விசுவாசம் வைத்தபோது அவர் என்னை முழுமையாக நிரப்பினார். இப்பொழுது, உலகம் ஒருபோதும் தந்திராத அன்பு, சந்தோஷம், சமாதானம் எனக்குள் வந்தது.

இயேசுவே என் வாஞ்சையும் என் வாழ்வும் ஆனார்.

அப்படி ஒரு உண்மையான அனுபவத்திற்குள் செல்லாவிட்டால் நம்பிக்கை இழந்து, வேறு நம்பிக்கை தருபவற்றைத் தேடிச் சென்றிருப்பேன்.

மதம் தத்துவம் என்ற எல்லையைத் தாண்டி இயேசுவோடு ஒரு தனிப்பட்ட உறவு ஏற்பட்டதே எனக்குள் மாற்றத்தை நிகழ்த்தியது. ஏதோ ஒரு உண்மையான முடிவை எடுக்கத் தீர்மானிக்கும் கட்டத்தில், என்னை அவர் முழுமையாக மாற்றினார். எழுத்தின்படி ஒரே இரவில் என்று கூட சொல்லலாம். என் நடத்தை, எண்ணம், நம்பிக்கை எல்லாவற்றிலுமே முழு மாற்றத்தைப் பிரதிபலித்தது.

எனக்குள் எற்பட்ட இந்த வித்தியாசமான மாற்றம் அனைவருக்கும் தெளிவாக தெரியவந்ததை நான் மறுக்கமாட்டேன். நான் மறுபடிபிறந்தேன். இது ஆலயத்தில் சொல்லப்படுகிற வார்த்தைமட்டும் அல்ல.

இயேசுவுக்குள் நான் புதிய சிருஷ்டி ஆனேன்.

என்னால் மேற்கொள்ள முடியாத காரியங்களிலிருந்து தேவன் என்னை விடுவித்தார்.

என் வாழ்வில் சில மாற்றங்கள் மாறத்துவங்கின. சில ஒரே இரவில் மாறிவிட்டன. என்னை அடிமைப்படுத்தி இருந்த நிக்கோடின் (போதை) முதல் ஆபாச ஒழுக்கங்கள் (Sexual immorality) வரையிலான பல்வேறு பாவங்களை வெற்றி கொள்ள கர்த்தர் எனக்கு வல்லமை தந்தார்.

என் மனைவி பழுதடைந்த சிறுநீரக நோயிலிருந்து குணமானாள். என் மகன் ஆஸ்துமாவிலிருந்து விசுவாசத்தால் குணமானான். இதன் மூலம் உங்களுக்கு நன்மையான செய்தியைப் பகிர்ந்திருப்பேனென்றால் இந்தச் சாட்சியைவாசிக்கும் நேரத்தை வீணாக்கி இருக்கமாட்டேன்.

நீங்கள் சொல்லலாம் நான் உங்களை நம்பவில்லை என்றோ, உண்மை என்றும், தவறு என்றும் எண்ணி இருக்கலாம் ஆனால் நான் பணிவுடன் வேண்டுவதெல்லாம், நீங்கள் இயேசு உங்களிடம் இந்த உண்மையை வெளிப்படுத்த கேட்க வேண்டும். இதை வாசித்ததற்காக நன்றி கூறி இதன் மூலம் தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

My Testimony with Jesus

Leave a Reply