ஒன்று போல் தோன்றும் மதம் பற்றிய கருத்துக்களை கடவுள் என்ற ஓரே வரிசையில் வைத்து சிலர் எண்ணுவர். டைட்டானிக் கப்பல்போல் மதவேறுபாடு என்ற தண்ணீரில் பயணம் செய்து மேற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளை மட்டும் பார்த்து மிஞ்சிய நம்பிக்கையுடன் அடியில் உள்ள பெரிய அழிவை நினைக்காது துறைமுகத்தில் பத்திரமாக கரைசேராததுபோல் அழிவுக்குள்ளாத பாதுகாப்பு என்றெண்ணி சிலர் அமிழ்ந்து போகின்றனர்.
வௌ;வேறாகப் பிரிந்து இருக்கும் இத்தகைய மதரீதியான கருத்துக்களை நிறையபேரால் அறிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.எல்லா மதங்களையும் ஒப்பியல் முறையில் படித்தால் ளழயெச போல் குறிப்பிட்ட வேறு பாடுகளை மட்டும் பார்ப்பர்.
தன்மதம் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களை மட்டும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். ஒவ்வாத கருத்துக்களை எதிர்ப்பர். அன்றாட வாழ்வில் அதன்படி நடக்க எத்தனிப்பர். தர்க்கமும் பகுத்தறிவும் கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. முழுவடிவத்தையும் அறியாது வெளிச்சுற்றுப் பகுதியில் நின்று வாழும் ஆபத்தை அவர்அறியார். தம் கருத்தில் மூழ்கி இருப்பவரால் வெளி மதத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது இயலாத ஒன்றாகிறது. கீழை நாட்டுக் குருக்கள் மேல்நாட்டு மக்களை தங்கள் கொள்கைக்கேற்ப மாற்றி வருகின்றனர்.
கடவுட் போட்டியின் பதட்டத்தைப் போக்க பாதைக்கு நடுவே பாலம் அமைத்து பழைய மதத்தை மேம்படுத்த எண்ணுகின்றனர். தாம் சென்ற பாதையை விரிவுபடுத்த விரும்புகின்றனர். மந்தை உணர்ச்சியுடன் பலகடவுட்கொள்கைகளை ஏற்று நடக்க யத்தனிக்கின்றனர். இது அறியாமையில் சிகரம் ஏறி கீழே விழ ஏதுவாகும்.
பார்வையற்றவன் கடவுளைப் பார்த்ததாகச் சொன்னால் அவன் பொய் சொன்னதாகவோ ஏமாற்றியதாகவோ கொள்ள முடியாது. இந்த மாதிரியான கருத்துக்கள் ஒருவரின் கடவுள் நம்பிக்கையை தவறான வழியில் இட்டுச் சொல்லும். மனுக்குலத்தில் கடவுட் கொள்கை பொதுவாக உள்ளது.
நம் வாழ்வு முழுச்சட்டத்தைப் போன்றது. மற்றவர்கள் அவரவர் சுயவிருப்புக்கேற்ற கருத்துக்களை அதில் அடைக்கின்றனர் அவர்கள் பொய் சொன்னதாகவோ ஏமாற்றியதாகவோ எண்ண முடியாது. குருசாதுமத ஆசிரியர், யோகி இந்த ரீதியான கருத்துக்களை வழங்குகிறார்கள்.அவர்கள் உண்மையான கடவுள்நிலையைத் தொட்டதாக அனுமானிக்க முடியாது.
மத்: 24:24
ஏனெனில் கள்ளக்கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
படைத்தவரின் சாயலுக்கேற்ப படைக்கப்பட்ட சிருஷ்டி பல வடிவங்களைத் தம்விருப்பிற்கேற்ப படைத்து ஆராதனை செய்வதா?
ரோமர்: 1:18-23
18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
முடிவாக, கடவுள் பற்றிய எல்லார் கருத்துக்களும் சமமான மதிப்புடையவை. ஆனால் எல்லார் கருத்தும் முழுமையாய் சரியானது என்று சொல்ல முடியாது.
பொதுவாகச் சொல்லப்போனால் எல்லா வெளிப்பாடும் பெரிய முழுப்பகுதியின் சிறுபகுதியே.
இந்துக்கள் சிறப்பானதும், தங்களுக்கே உரியதெனப் பாராட்டி முக்கியத்துவம் தருகின்றனர். வேறு கூட்டத்தாரோடு இணைந்து மற்ற மதங்களோடு இசைந்து போவதில் எந்தச் சிக்கலும் இராது. நம் கருத்துக்களில் சிறிய உண்மையையே நமக்கு எல்லாருக்கும் தெரியும்.ஆனால் போதுமான ஆதாரம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். இறுதியாக எல்லா நம்பிக்கைகளும் சமமானவை.
மதவிஷயத்தில் பொறுமையாயிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையான மதரீதியான மேம்பாட்டை அது விளைவிக்காது பொறுமையைவிட உண்மையும் அன்புமே வெல்லும் நிறைய பாதைகள் நமக்கு முன்னே விரிந்து காணப்படலாம் ஆனால் ஒரே வழி நித்திய ஜீவனை அடைய வழிகாட்டும். யுகயுகமாய் ஆனந்தமாய் வாழச் செய்யும் அந்த அற்புத வழியில் நீங்கள் செல்ல வேண்டும்.
வேதம் இரு வழிகளைச்சுட்டிக் காட்டுகிறது. அழிவுக்குள் அழைத்து செல்லும் வழி விசாலமானது. அடுத்தது ஜீவனுக்குள் அழைத்துச் செல்லும் வழி குறுகிய வழி
நடக்க கால்கள் இருப்பது போல் வாழ்வைத் தேர்ந்தெடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது.
நான் உங்களைக் கேட்கிறேன். அழிவுக்குள்ளான அகல வழியா? வாழ்வுதரும் குறுகிய வழியா?
இயேசு ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்றார். முழு இருதயத்தோடும் அவரைத் தேடினீர்களானால் உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்து அந்த வழியைக் காட்டுவார். அழைத்தும் செல்வார்.
மத்தேயு 11: 28 – 30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.